
லங்கா ஐஓசி நிறுவனம் மீண்டும் பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி, மார்ச் 25ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் விலை 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 10 ஆம் திகதி ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்த நிலையிலேயே மீண்டும் தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு விலையை உயர்த்தியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால் டீசல் விலையில் மாற்றம் செய்யவில்லை என்றும் ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை.