நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி, ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பில் சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சத்தியாகிரகப் போராட்டம் ஹைட் பார்க் மைதானத்தில் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது.
“நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படுகின்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்