பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலைமையில், கிராமப்புற அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக உலக வங்கியின் உதவியை நாடுவதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
குறிப்பாக கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்காக உலக வங்கியிடம் இருந்து சுமார் 1 பில்லியன் டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஏப்ரல் மாதமளவில் நிதி அமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அங்கு உலக வங்கியின் பிரதிநிதிகளை அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளையும் நிதி அமைச்சர் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.