April 11, 2025 12:49:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடிவுக்காலத்தை ஏற்படுத்துவோம்”

”இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடிவுக்காலத்தை தமிழக அரசு ஏற்படுத்தி தரும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2022- 23ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் வியாழக்கிழமை பதிலளித்து உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

”இலங்கைத் தமிழர்கள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தமிழகத்திற்கு வந்துகொண்டுள்ள செய்திகளை அறிந்தேன். இதுதொடர்பாக மத்திய அரசை தொடர்புகொண்டு இதை எப்படி கையாள வேண்டும் என சட்டரீதியாக கேட்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்று முதல்வர் இதன்போது கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையால் வடக்கில் இருந்து கடல்வழியாக தமிழ்க் குடும்பங்கள் சில அகதிகளாக தமிழகம் சென்றுள்ள நிலையிலேயே முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.