January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயில் கட்டண அதிகரிப்பு விபரங்கள்!

வடக்கு உள்ளிட்ட பிரதான மார்க்கங்களில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 24 முதல் இந்த கட்டண அதிகரிப்பு அமுலாகும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டை தொடக்கம் குருநாகல் வரை முதலாம் வகுப்பிற்கான 600 ரூபா கட்டணம் 1000 ரூபா வரையும், கோட்டையிலிருந்து அநுராதபுரம் வரையான முதலாம் வகுப்பு கட்டணம் 1200 ரூபாவிலிருந்து 1500 ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை முதல் வகுப்பிற்கான கட்டணம் 1400 ரூபாவிலிருந்து 1700 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

இதனை தவிர, இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு ஆசனங்களுக்கான முன்பதிவு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பிரதான ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையான முதலாம் வகுப்பு கட்டணம் 1000 ரூபாவிலிருந்து 1200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நானுஓயாவிற்கு 1200 ரூபாவிலிருந்து 2000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் கூறினார்.

கோட்டையிலிருந்து எல்ல மற்றும் பதுளை வரையான போக்குவரத்திற்கு முதலாம் வகுப்பிற்கான கட்டணம் 1500 ரூபாவிலிருந்து 2500 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சாதாரண பயணக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது