May 26, 2025 3:53:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச வங்கிகள் தொடர்பில் மத்திய வங்கி விடுத்த அறிவித்தல்!

வங்கிக் கட்டமைப்புகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அரச வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இயங்குவதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.