அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை விரைவில் இழக்கும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
‘முழு நாடும் சரியான பாதையில்’ எனும் தொனிப்பொருளில் 11 கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள அறிக்கை கண்டியில் மகாநாயக்க தேரர்களிடம் சமர்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே வீரவன்ச இதனை தெரிவித்தள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கும் அசிங்கமான அமெரிக்கரான நிதி அமைச்சர் முன்னாள் பிரதமர் ஒருவரை மரியாதை இல்லாத வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் எப்படியானவர் என்பதனை அதன்மூலம் அவர் காட்டியுள்ளார் என்று வீரவன்ச கூறியுள்ளார்.
இவ்வாறான நபர்களை அரசாங்கத்தில் வைத்துக்கொண்டு முன்னால் செல்ல முடியாது. எவ்வாறாயினும் அரசாங்கம் விரைவில் 113 என்ற பெரும்பான்மை ஆசனங்களையும் இழக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இனியொருபோதும் தாம் ராஜபக்ஷக்களை பதவிகளுக்கு கொண்டு வருவதற்காக செயற்பட மாட்டோம் என்றும் விமல் வீரவன்ச இதன்போது குறிப்பிட்டுள்ளார்.