May 24, 2025 19:12:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க நடவடிக்கை!

இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற 16 பேரையும் மண்டபம் முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் நான்கு குடும்பங்களை சேர்ந்த 16 பேர், கடல் வழியாக தமிழகம் சென்ற போது இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டிருருந்தனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே தாம் தமிழகம் வந்ததாக அவர்கள் கூறியிருந்தனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளின் போது தெரியவந்திருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் அஜர் செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் தமிழக அரசின் முடிவின்படி சிறையில் அடைக்கும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 16 பேரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இதேவேளை இலங்கையர்களுக்கென முகாமில் 150 வீடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.