January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரணிலுடன் இணையும் 10 எம்.பிக்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் மகிந்தனந்த அளுத்கமகே சபையில் தகவல் வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய உணவு நெருக்கடி நிலைமை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை கூறியுள்ளார்.

குறிப்பாக ரணிலுடன் இணைந்துகொள்ளவுள்ள 10 பேரில் ஹ, எ, ர, ச ஆகிய எழுத்துகளில் பெயர்கள் ஆரம்பிப்பவர்களும் உள்ளனர் என்றும் மகிந்தனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை பிடிப்பதற்கு முயற்சிக்கும் நிலையில், அங்குள்ள சிலர் ரணிலுடன் செல்ல முயற்சிக்கின்றனர் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.