February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் மூவர் மரணம்!

கண்டி, கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புற பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், தாய் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.