ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்பரால் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முரண்பட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தவர்களுக்கு மத்திய வங்கி ஆளுநர் தெளிவுப்படுத்தினார்.
இதன்போது கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் பொருளாதாரம் வீழ்ச்சிடைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில் மத்திய வங்கி ஆளுநரின் கருத்து தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
அதன்போது ரணில் விக்கிரமசிங்க கூறுகையில், ”இந்த மாநாடானது, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு அமையவே அழைக்கப்பட்டுள்ளது.
எனினும்.நாட்டில் காணப்படும் பிரச்சனை காரணமாகவே இங்கே நான் வர வேண்டியுள்ளது. மத்திய வங்கி ஆளுநரின் கருத்துக்கு நான் பதிலளித்தால் என்னவாகும். இறுதியில் விஜயன் நாட்டுக்கு வராவிட்டால் இந்த பிரச்சனையும் இருந்திருக்காது என்றே கூற வேண்டிவரும்” என்றார்.
இதன்போது, பதிலளித்துள்ள ஜனாதிபதி, ”உங்களின் மனது நோகுமாக இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கின்றேன். அந்த முறைமை வரும் வரும் அந்த வருட கணக்கால் அவர் அப்படி கூறியிருக்கலாம். அதனை விடுத்து எவருக்கும் குற்றச்சாட்டை முன்வைப்பதற்காக அல்ல. இது அரசியல் விடயம் அல்ல” என்றார்.