January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்திற்கு எதிராக ஜேவிபி பேரணி!

அரசாங்கத்திற்கு எதிராக, ஜேவிபியினரால் இன்று நுகேகொடையில் பேரணி நடத்தப்பட்டது.

“74 வருட கால சாபத்திற்கு முடிவு கட்டுவோம், அடக்குமுறை அரசாங்கத்தை துரத்துவோம்” எனும் தொனிப்பொருளில் நடந்த இந்தப் பேரணியில் பெருமளவனவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பேரணி , ஹைலெவல் வீதியூடாக நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவௌி கலையரங்கை சென்றடைந்து.

இதன்போது உரையாற்றிய தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் திருடர்கள் என குறிப்பிட்டார்.

நாட்டை கடன் பொறிக்குள் சிக்கவைத்து, நாட்டு மக்களின் சொத்தை கோடிக்கணக்கில் திருடி, குடும்பத்தை வலுவாக்கிக் கொண்ட ராஜபகக்ஷவினர் நாட்டை விட்டுச்செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.