February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் வரவு செலவுத் திட்டத்தில் திருத்தம்!

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வரவு செலவுத் திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டு மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அரச நிறுவனங்களின் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இது தொடர்பில் கோரிக்கையை முன்வைத்திருந்தது.