வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் கட்டார் தூதுவர் அல் சொரூர் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள் பேரவையில் கட்டார் ஆதரவையும் இலங்கைக்கான உதவிகளையும் பாராட்டிய பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கையில் நடைபெற்று வரும் நல்லிணக்கம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பு, உறுதியான நட்புறவு மற்றும் பன்முக உறவுகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் பீரிஸ் உறுதியளித்துள்ளார்.
இதன்போது, இலங்கையுடன் வலுவான பொருளாதார நட்புறவை மேம்படுத்துவதற்கு கட்டார் உறுதியளிப்பதாக தூதுவர் சொரூர் கூறியுள்ளார்.