பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று, பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர், அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரனும், ஜேவிபி தலைவர் அனுரகுமாரவும் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்படி சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சியில் 86 பேர் வாக்களித்தனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அடங்கலாக 35 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதன்படி பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தம் 51 வாக்குகளால் நிறைவேறியுள்ளது.