
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலை இலக்காகக் கொண்டு நாடு முழுவதும் 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகள் அடிப்படையாகக் கொண்டு, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு 2000 ரூபா என்ற அடிப்படையில் கூப்பன் முறையின் கீழ் பகிர்ந்தளித்து இந்தியா வழங்கிய நிதியை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றதாக இதன்போது சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமக்கு ஏற்றவாறு உள்ளூராட்சி தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான திட்டத்திலும் அரசாங்கம் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் இந்தியா வழங்கிய நிதியை பயன்படுத்தும் முறை தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.