January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் மட்டுமே பொருட்களின் விலை குறைவாக உள்ளது”: எஸ்.பி.திஸாநாயக்க

ஆசியாவிலேயே இலங்கையில்தான் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனையாகின்றன என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஊடகங்களுக்கு கருத்துக் கூறும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

எரிவாயு, எரிபொருள் என்பன உலகில் எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ளது. மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இவற்றின் விலைகள் இலங்கையில் குறைவாகவே உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவில் நாங்களே குறைந்த விலையில் பொருட்களை வழங்குகின்றோம். அரசாங்கம் முடிந்தளவுக்கு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியே விலை அதிகரிப்பை மேற்கொள்கின்றது எனவும் கூறியுள்ளார்.