January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீன்பிடி துறைமுகங்களின் அபிவிருத்திக்காக இந்தியாவுடன் இலங்கை உடன்படிக்கை!

Fishery Boats Common Image

பருத்தித்துறை, பேசாலை, குருநகர் உள்ளிட்ட பிரதேசங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பரஸ்பர உடன்பாடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பருத்தித்துறை, பேசாலை, குருநகர், பலப்பிட்டிய மற்றும் ஏனைய பரஸ்பர உடன்பாடுகள் எட்டப்படும் இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக இருநாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.