
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த சில தினங்களாக அமைதியின்மை நிலவுகின்றன.
சில இடங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையிலேயே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.