
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த நிமல் லான்சா, தனக்கு தனது கடமைகளை செய்வதற்கு சிலர் இடையூறுகளை ஏற்படுத்துவதாக சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே அவர் பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளார்.