May 29, 2025 19:22:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வருகிறார் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர்

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், இலங்கை வரவுள்ளார்.

மார்ச் 23 ஆம் திகதி அவர் இலங்கை வருவார் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தின் அங்கமாகவே விக்டோரியா நுலாண்ட், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அரச உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.