June 12, 2025 10:48:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கத் தூதுவர் – ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

கொழும்பில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வேளையில் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.