ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மார்ச் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்க அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதியினால் சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் தாம் கலந்துகொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சி அறிவித்துள்ள நிலையில், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அதில் கலந்துகொள்ளாது என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளில் மூன்று கட்சிகள் மாத்திரமே சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.