இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் மின்கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கப்படலாம் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஆனமடுவ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி மின்சார சபையினால் வழங்கப்பட்டுள்ள யோசனைக்கமைய 30 அலகுகளுக்கான கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் நிலைமையே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாக கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மின்குமிழையும், மின்விசிரியையும் பார்த்துக்கொண்டு மட்டும்தான் இருக்க வேண்டி வரும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.