நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பில் மார்ச் 23 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடத்தப்படவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அதேபோன்று அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியும் கலந்துகொள்ளாது என்று தெரிவவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆளும்கட்சியின் பங்காளி கட்சிகளான உதய கம்மன்பிலவின் பிவிதுறு ஹெல உருமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் வாசுதேவ நாணயக்காரவின் நவ சமசமாஜக் கட்சி ஆகியனவும் பங்குபற்றாது என அறிவித்துள்ளன.
எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளன.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.