January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மண்ணெண்ணெய்க் கேட்டு கொழும்பில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்!

மண்ணெண்ணெய்க் கேட்டு கொழும்பில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்!

மண்ணெண்ணெய் கேட்டு கொழும்பில் பேஸ்லைன் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

நாட்டில் சமையல் எரிவாயுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் இன்று காலை முதல் கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஆனால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவில்லை.

இதன்போது ஆத்திரமடைந்த மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வேளையில் பொலிஸார் அந்த இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற போதும், மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.