இலங்கை அரசாங்கம் சீனாவிடம் இருந்து கடன் உதவியை கோரியுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகவும் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் சீனா தற்போது பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீனத் தூதுவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை இந்தியாவிடம் இருந்து கடன் வசதியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஒரு தொகை டீசல் தற்போது இலங்கை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.