இலங்கையின் மேல்மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் கடதாசி பற்றாக்குறை காரணமாக மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படவுள்ளதாக முன்னர் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கவில்லை எனவும், வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசியை தற்போது பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இதனால் பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடக்கும் என்றும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தவணைப் பரீட்சைகள் திட்டமிட்ட அட்டவணையின்படி மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
மேலும், தரம் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் மார்ச் 21 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.