
இலங்கையில் அமெரிக்க டொருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தமக்கு அறிவித்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உள்நாட்டு அழைப்புகளுக்கான கட்டணங்கள் அல்லது இணையத்தள பாவனைக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் உள்நாட்டு அழைப்புக்கான கட்டணங்களை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அந்த நிறுவனங்களிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.