January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் ராமநாயக்க மருத்துவமனையில் அனுமதி!

File Photo

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோற்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.