இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடரும் நிலையில், பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று முற்பகல், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகொல பகுதியை சேர்ந்த 70 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் கண்டியில் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.