யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக யாழ்ப்பாணம், மட்டுவிலில் 200 மில்லியன் ரூபா செலவில் இந்த பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டுவில் நகருக்கு வருகை தந்த கௌரவ பிரதமருக்கு அப்பகுதி மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், யாழ் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட இந்த விசேட பொருளாதார மத்தியநிலையத்திற்கு பதுளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் யாழ் சந்தையிலிருந்து அத்தியாவசிய மரக்கறிகள் மற்றும் பழங்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.