June 11, 2025 11:37:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமையல் எரிவாயு விலை 4000 ரூபாவை கடந்தது!

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்து செல்லும் நிலையில், அதனுடன் சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி லாஃப் நிறுவனம் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையை 4,199 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும் 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் சிலிண்டரின்  விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லிட்ரோ நிறுவனமும்  விலை அதிகரிப்புக்கு திட்டமிட்டுள்ளது.

2000 ரூபாவினால் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகின்றது.