
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி 400 கிராம் பால்மா பக்கட் ஒன்றின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சந்தையில் 400 கிராம் பால்மா பக்கட் ஒன்று 790 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பே இதற்கான காரணம் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.