January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து மரணம்! 

மண்ணெண்ணெய் வாங்குவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல், கண்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் டொலர் நெருக்கடியால் சமையில் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலானவர்கள் தற்போது மண்ணெண்ணெய் அடுப்பையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்கான வரிசைக்கு அடுத்தப்படியாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்கின்றனர்.

இந்நிலையில், கண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த 71 வயது நபரொருவர் மயங்கி விழுந்துள்ளதாகவும், பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.