யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நயினாதீவிலுள்ள ஶ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் இன்று அங்கு சென்றிருந்தார்.
இதன்போது அவர், நயினாதீவுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இவ்வேளையில் நயினாதீவு ரஜமஹா விகாரை மற்றும் ஶ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதேவேளை, நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதற்கான சன்னஸ் பத்திரத்தை பிரதமர் வழங்கி வைத்தார்.
அமரபுர மகா நிகாயாவின் அம்பகஹபிட்டிய பிரிவின் பிரதம சங்க தலைவர் நயினாதீவு ரஜமஹா விகாரை விகாராதிபதி நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரரிடம் பிரதமர், அதனை வழங்கி வைத்துள்ளார்.