சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை அரசாங்கம் பெற வேண்டியது கட்டாயமானது என்று என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு மற்றும் வருவாய் குறைந்து வருவதால் சர்வதேச நாணய நிதியத்தை நாடாது இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் போருக்குப் பின்னர், உள்நாட்டுப் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க பல நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாடியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கூட கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்றுமதி, நிதிக் கொள்கை மாற்றங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிற பரிந்துரைகளுக்கு முன்னுரிமை வழங்கி அரசசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.