June 15, 2025 3:04:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொவிட் தொற்று உறுதி!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில், அவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொள்வோருக்கு நடத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனையிலேயே அமைச்சர் டக்ளஸுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர், நயினாதீவுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்துகொள்வோருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து பிரதமருடனான அவரின் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.