இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை மீண்டும் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் பால்மா கிலோ ஒன்றின் விலையை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும், 400 கிராமின் விலையை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் பால்மா விலை அதிகரித்து வரும் நிலையிலேயே இலங்கையில் இந்த விலை அதிகரிப்பை செய்யவுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை சமையல் எரிவாயு விலையை 2000 ரூபாவினால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.