கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் திடீரென தடைப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு 05, 06 பிரதேசங்கள், தெஹிவளை, கல்கிசை , இரத்மலானை, பத்தரமுல்ல, பெலவத்தை, உடுமுல்லை மற்றும் ஹிம்புட்டானை ஆகிய இடங்களில் இன்று இரவு முதல் 24 மணிநேரத்திற்கு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பிரதான நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக குறித்த பிரேசங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.