
ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம செயலாளர் ஜே ஷா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஆசிய கிரிக்கெட் சபையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜே ஷா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து 40 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போதே இவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி எஷ்லி டி சில்வா ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.