இலங்கையில் கடும் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
தென், மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 18 ஆம் திகதி இரவு 8 மணிக்குள் இந்த காலநிலை நிலவும் என்றும், இதனால் இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.