ஜேவிபியின் சோஷலிச இளைஞர் சங்கம், கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இன்று முற்பகல் மருதானை தொழில்நுட்ப சந்திக்கு அருகில் கூடிய இளைஞர்கள் அங்கிருந்து பேரணியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றனர்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் ஊடாக செயலக வளாகத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
”எரிபொருள் வரிசை வேண்டாம்”, ”இந்தியாவுக்கு வழங்கிய எண்ணெய்க் குதங்கள் – அமெரிக்காவுக்கு வழங்கிய மின்நிலையங்களை உடனடியாக மீளப் பெற வேண்டும்” என்ற கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.