இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் சலுகைக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டது.
புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் இன்று பகல் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
உடன்படிக்கையில் இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
Neighborhood first. India stands with Sri Lanka.
US$ 1 billion credit line signed for supply of essential commodities.
Key element of the package of support extended by India. pic.twitter.com/Fbzu5WFE3n
— Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) March 17, 2022
உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சு தெரிவித்துள்ளது.