வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பழ வகைகள் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள் சிலவற்றுக்கு விசேட பண்ட வரியை விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மார்ச் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி யோகட் உள்ளிட்ட பால் உற்பத்திப் பொருட்களுக்கு கிலோ ஒன்றுக்காக 1000 ரூபா விசேட வரி அறவிடப்படவுள்ளது.
அத்துடன் ஆப்பிள், திராட்சை, தோடம், பேரீச்சம் உள்ளிட்ட பழ வகைகளுக்கு கிலோ ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபா வரையில் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி அதிகரிப்பினால் குறித்த பொருட்களின் விலைகள் உயர்வடையும் என்று தெரிவிக்ககப்படுகின்றது.