January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆடை விலைகள் 50 வீதத்தால் அதிகரிக்கலாம்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையால் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் ஆடைகளின் விலைகள் 50 வீதத்தால் அதிகரிக்கப்படலாம் என்று புடவைக் கைத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடியால், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் தற்போது சந்தையில் புடவைகளின் விலைகள் 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் ஆடை உற்பத்தித்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தைத்து முடிக்கப்பட்ட ஆடைகளின் விலைகள் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் ஆடைகளின் விலைகள் அதிகரிப்பதனை தவிர்க்க முடியாது இருக்கும் என்று அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.