இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இது தொடர்பில் எதிர்க்கட்சிகளும் கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன், அவரை பதவி விலக்குவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன.
இவ்வாறான நிலைமையில் இந்த செய்திகளை மறுத்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அவர் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க தமக்கு பலமாக இருக்கின்றார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.