மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இதன்படி கட்டணத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பான யோசனையை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு மின்சக்தி அமைச்சர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும், மின்சார சபை அதிகாரிகளுக்கும் இடையே நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டொலர் நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின்சார சபை பெறுமளவில் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.