February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியப் பிரதமருடன் அமைச்சர் பஸில் சந்திப்பு!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

புதுடில்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, இலங்கைக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிக்கு இந்திய பிரதமருக்கு நிதி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு நிதி அமைச்சர், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இல்லையெனில் மார்ச் 30 அன்று இலங்கையால் நடத்தப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்திய விஜயத்தின் போது அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் உதவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளையும் பஸில் ராஜபக்‌ஷ சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.