January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமையல் எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்!

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளன.

போதுமான எரிவாயு கைவசம் இல்லாத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் எரிவாயு கொள்வனவுக்காக தொடர்ந்தும் விற்பனை நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்கின்றனர்.